'டிமான்டி காலனி 3' படத்தின் அப்டேட் கொடுத்த பிரியா பவானி சங்கர்!
நடிகர் அருள்நிதி, இயக்குநர் அஜய் ஞானமுத்து கூட்டணியில் வெளியான திரைப்படம் 'டிமான்டி காலனி'. இப்படம் ரசிகர்களை உறைய வைக்கும் திகில் படமாக இருந்தது. நடிகர் அருள்நிதி, தனித்துவமான திரைக்கதைகள் மற்றும் வித்தியாசமான பாத்திரங்களை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த அர்ப்பணிப்புடனும், ஆர்வத்துடன் செயல்பட்டு, திரையுலகில் ஒரு பெரிய நிலையை அடைந்துள்ளார். டிமான்டி காலனி மூலம் அறிமுகமான திரைப்பட இயக்குனர் அஜய் ஞானமுத்து, 'இமைக்கா நொடிகள்' மற்றும் ‘கோப்ரா’ போன்ற பெரிய படங்களை இயக்கியுள்ளார்.
இதன் வெற்றியை தொடர்ந்து, இந்த படத்தின் 2ம் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ‘டிமான்டி காலனி 2’ படத்தில், அருள்நிதி, பிரியா பவானி சங்கர், அருண் பாண்டியன் முத்துக்குமார், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு சாம் சிஸ் இசையமைத்திருந்தார். இதனையடுத்து இதன் 3ம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்துள்ளனர்.
இந்த நிலையில், ‘டிமான்டி காலனி 3’ குறித்த அப்டேட் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதன்படி இப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாக நடிகை பிரியா பவானி சங்கர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன் அவர் தனது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.