Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

போக்குவரத்துறை தனியார்மயம்? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!

12:19 PM Jul 29, 2024 IST | Web Editor
Advertisement

போக்குவரத்துறை தனியார்மயமாக்கப்படும் என பரவும் செய்திகள் முற்றிலும் வதந்தி என அமைச்சர் சிவசங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

Advertisement

தமிழ்நாட்டின் 8 போக்குவரத்துக் கழகங்களின்கீழ் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 2014-ம் ஆண்டுக்குப் பிறகு புதிய பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் பேருந்துகளை இயக்குவதில் பெரும் சிக்கல் இருந்து வந்தது.

இந்த நிலையில் ஒப்பந்ததார்களிடம் இருந்து சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் பேருந்துகளை இயக்க டெண்டர் கோரப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.  இது தொடர்பாக இன்று கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்ததாவது..

“அதிமுக ஆட்சியில் சரியாக ஊதியம் வழங்காதது, ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பணி நிறைவு பணப்பலன் கொடுக்காதது, ஓய்வு பெறும் வயதை 58ல் இருந்து 60ஆக உயர்த்தியது உள்ளிட்ட காரணங்களால் கடந்த மே மாதம் அதிகமானோர் ஓய்வு பெறுகிற சூழல் ஏற்பட்டது.  இதனால் தான் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் கீழ் சில இடங்களில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களை ஒப்பந்த அடிப்படையில் எடுக்கிறோம்.

போக்குவரத்துத் துறை தனியார்மயமாக்கப்படும் என பரவும் செய்தி  முற்றிலும் வதந்தியாகும். தனியார் ஒப்பந்த ஊழியர்களை பணியில் அமர்த்துவது தொடர்பாக வெளியான செய்தியும் முற்றிலும் வதந்தியாகும். அரசை குறை கூறவும் அரசியல் நோக்கத்திற்காகவும் சர்ச்சைகள் பரப்பப்படுகிறது.

காலியான இடங்களை நிரப்ப காலதாமதம் ஆன காரணத்தால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர்கள் ஒப்பந்த அடிப்படையில் எடுக்கப்பட்டார்கள். அதன் காரணமாக கோடை காலங்களில் அரசு விரைவு போக்குவரத்து கழகப் பேருந்துகளை சிரமமின்றி இயக்க முடிந்தது, அதிக வருவாயும் ஈட்ட முடிந்தது. பணியாளர்கள் தேர்வுக்கு பிறகு ஒப்பந்த ஓட்டுநர் மற்றும் நடத்துநர் முறை கைவிடப்படும்.” என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

Tags :
BUSMinister Siva ShankarPrivatizationTransport Minister Sivashankar
Advertisement
Next Article