உக்ரைனுக்கு திடீர் பயணம் மேற்கொண்டார் இங்கிலாந்து இளவரசர் ஹாரி!
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 3 வருடங்களாக போர் நடைப்பெற்று வருகிறது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா இப்போரை தொடங்கியது. அந்த நாட்டின் மீது போர் தொடுத்தது.
இப்போரில் இன்னும் இரு நாடுகளுக்கு இடையில் போர் நிறுத்தம் ஏற்படவில்லை. இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுவருகிறார்.
இந்த நிலையில் இங்கிலாந்து இளவரசர் ஹாரி உக்ரைன் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ரயில் மூலம் சென்ற அவர் இன்று உக்ரைன் தலைநகர் கீவ் வந்தடைந்தார். உலகெங்கும் விளையாட்டு போட்டிகளில் காயமடைந்தவர்களுக்கு உதவுவதற்காக தான் நடத்தி வரும் இன்விக்டஸ் கேம்ஸ் அறக்கட்ட்ளை மூலம் போரில் காயமடைந்துள்ள உக்ரைன் வீரர்களுக்கு அவர் உதவ விருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீவ் நகருக்குச் செல்லும் போது செய்தியாளர்களிடம் பேசிய இளவரசர் ஹாரி, "போரை நிறுத்த முடியாது, ஆனால் மீட்பு செயல்முறைக்கு உதவ எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
போர் தொடங்கியபின் உக்ரைனுக்கு ஹாரி மேற்கொள்ளும் 2வது பயணம் இதுவாகும்.