Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"பிரதமரின் வருகை அரசியல்ரீதியாக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்" - நியூஸ் 7 தமிழுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் பிரத்யேக பேட்டி!

11:57 AM Feb 21, 2024 IST | Web Editor
Advertisement

பிரதமரின் வருகை அரசியல்ரீதியாக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நியூஸ் 7 தமிழுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளார். 

Advertisement

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக பிப்.28 ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார்.  நெல்லையில் நடைபெறும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.  இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி செல்கிறார்.  இந்த நிலையில் பாஜக மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம்,  முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்,  சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் இன்று நேரில் ஆய்வு செய்தனர்.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நியூஸ்7 தமிழ் தலைமை செய்தியாளர் சுடலைக்குமாருக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:

" பிரதமர் நரேந்திர மோடி பிப்.27-ம் தேதி தமிழ்நாடு வருகிறார்.  என் மண் என் மக்கள் நிறைவு விழாவில் கலந்து கொள்கிறார்.  பிப்.28-ம் தேதி தூத்துக்குடியில் 2 திட்டங்களை துவக்கி வைக்கிறார்.  நெல்லையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.  பிரதமரின் தமிழ்நாடு வருகை அரசியல்ரீதியாக மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டிற்கு ஏராளமான திட்டங்களை பிரதமர் மோடி தந்து  கொண்டிருக்கிறார்.  தமிழ்நாட்டு மக்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.  பிரதமர் மோடியின் வருகை அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தும்."

இவ்வாறு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Tags :
Election2024Narendra modipmopon radhakrishnantamil nadu
Advertisement
Next Article