பிரதமர் நரேந்திர மோடி தமிழ் புத்தாண்டு வாழ்த்து!
சித்திரை மாத பிறப்பை ஒட்டி, தமிழகத்தில் இன்று தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. அறுவடை திருநாள், தமிழ் புத்தாண்டை ஒட்டி குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் என பலர் வாழ்த்து கூறி வருகின்றனர்.
அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழ் புத்தாண்டையொட்டி நாட்டு மக்களுக்கு வாழ்த்து கூறி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "இந்த புத்தாண்டு வளத்தையும் ஆரோக்கியத்தையும் கொண்டு வரட்டும்" என்று பதிவிட்டுள்ளார். ஆங்கிலத்திலும் பிரதமர் மோடி தனது வாழ்த்து செய்தியை குறிப்பிட்டுள்ளார்.
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "நம் நாட்டின் பாரம்பரியம், கலாசாரத்தை பிரதிபலிக்கும் இந்த பண்டிகைகளை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
அனைவரின் பசி போக்கும் உழவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் இந்த பண்டிகைகள், இயற்கை மற்றும் கலாசாரத்தை பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு இந்த பண்டிகைகள் மிகச் சிறந்த ஊக்கமளிக்கட்டும்" என குறிப்பிட்டுள்ளார்.