Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேச்சு!

10:10 AM Nov 29, 2023 IST | Web Editor
Advertisement

உத்தரகாண்ட் சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் நலம் விசாரித்தார்.

Advertisement

உத்தரகாண்ட் மாநிலம்,  உத்தரகாசி மாவட்டம் சில்க்யாரா அருகே சுரங்கத்தில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளர்கள் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் கடந்த 12-ம் தேதி சிக்கினர்.  இதனைத் தொடர்ந்து பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நடந்த மீட்புப் பணிகள் 17 நாள்கள் கழித்து செவ்வாய்க்கிழமை வெற்றிகரமாக 41 பேரும் மீட்கப்பட்டனர்.  மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு முழு உடல் பரிசோதனையும் மருத்துவமனையில் நடத்தப்பட்டது.  இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 41 தொழிலாளர்களுடன் தொலைபேசி மூலம் நலம் விசாரித்தார்.

இதையும் படியுங்கள்: சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே செல்லும் இரவு ரயில் இன்று முதல் ரத்து -தெற்கு ரயில்வே அறிவிப்பு!

முன்னதாக செவ்வாய்க்கிழமை இரவு மீட்புக் குழுவினரை பாராட்டிய பிரதமர், "சுரங்கத்தில் இருந்து தொழிலாளர்கள் மீட்டது உணர்ச்சிபூர்வமானது.  சுரங்கத்தில் இருந்து தொழிலாளர்களை மீட்க அயராது உழைத்த மீட்புக்குழுவினருக்கு பாராட்டுகள். தொழிலாளர்களின் மன உறுதியும் வலிமையும் ஊக்கம் அளிக்கிறது.  தொழிலாளர்களின் குடும்பங்கள் காண்பித்த பொறுமையும் தைரியமும் மிகவும் பாராட்டத்தக்கது." என்று தெரிவித்திருந்தார்.

Tags :
#RescueOperationAccidentNarendra modiprime ministerSilkyaraSilkyaraTunneltunnelTunnelAccidentTunnelCrashTunnelRescueUttarakashiRescueUttarakhandUttarakhandTunnelRescueUttarKashi
Advertisement
Next Article