Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிரதமர் நரேந்திர மோடிக்கு மொரிஷியஸ் நாட்டின் உயரிய விருது !

பிரதமர் நரேந்திர மோடிக்கு மொரிஷியஸ் நாட்டின் மிக உயர்ந்த விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது.
08:12 AM Mar 12, 2025 IST | Web Editor
Advertisement

இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு தேசம் மொரிஷியஸ். அந்த நாட்டின் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் அழைப்பு விடுத்ததன்பேரில் அந்நாட்டின் 57-ஆவது தேசிய நாளில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் அரசுமுறை பயணமாக மொரிஷியஸ் சென்றடைந்தார்.

Advertisement

மொரிஷியஸ் சென்ற பிரதமர் மோடிக்கு அங்கு பிரமாண்ட வரவேற்பளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் தரம்பீர் கோகூல் மற்றும் அவரின் மனைவி பிருந்தா கோகூல் ஆகியோரைச் சந்தித்த பிரதமர் மோடி அவர்களுக்கு கும்பமேளா திரிவேணி சங்கமத்தின் நீரை பரிசளித்தார்.

முதல் முறையாக மோரீஷஸ் சென்ற பிரதமர் மோடிக்கு இந்தியப் பெருங்கடலின் ஆர்டர் ஆப் தி ஸ்டார் அண்ட் கீ ஆப் தி ஆர்டர் ஆப் தி கிராண்ட் கமாண்டர் ஆகிய நாட்டின் உயரிய விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளது. இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் என்ற சிறப்பையும் பிரதமர் மோடி பெறவிருகிறார். மேலும், இது பிரதமர் மோடி பெறும் 21 வது சர்வதேச விருது இதுவாகும்.

Tags :
awardMauritiusNarendra modiprime ministerReceives
Advertisement
Next Article