Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக ஜன.19-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார்!

10:17 PM Jan 16, 2024 IST | Web Editor
Advertisement

பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக ஜனவரி 19-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார்.

Advertisement

மத்திய அரசு திட்டத்தின்கீழ் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் கடந்த 2018ம்
ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.  இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில்
நடத்தப்பட்ட இந்த போட்டியானது,  இந்தாண்டு தமிழ்நாட்டில் உள்ளது.  சென்னை, கோவை, மதுரை,  திருச்சி ஆகிய நான்கு மாவட்டங்களில் வருகின்ற 19-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை
நடைபெற உள்ளது.

தமிழ்நாடு அரசு மற்றும் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 2024-ஆம் ஆண்டுக்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் இந்த விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. 18 வயதுக்குட்பட்டவர்கள் பிரிவில் நடத்தப்படும் இந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் ஜனவரி 19ஆம் தேதி முதல் ஜனவரி 31 வரை நடைபெற உள்ளது.

கேலோ இந்தியா போட்டிகளில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த சுமார் 5,500க்கு மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். மொத்தம் 27 வகையான பிரிவில் போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில், தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 4-ஆம் தேதி (04.01.2024) டெல்லியில் நேரில் சந்தித்து கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான அழைப்பிதழை வழங்கினார்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக தமிழ்நாடு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி வரும் 19-ம் தேதி கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை பிரதமர் தொடங்கி வைக்கிறார். மேலும் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags :
#Sportskhelo indiaNarendra modinews7 tamilNews7 Tamil UpdatesPMO IndiaTamilNaduudayanidhi stalin
Advertisement
Next Article