"என் நண்பர் #DonaldTrump -க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்" - பிரதமர் மோடி வாழ்த்து!
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்பிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. இந்த வகையில், அமெரிக்காவின் 47- வது அதிபர் தேர்தல் மொத்தமுள்ள 50 மாகாணங்களிலும் நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இதில், ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸும் , குடியரசுக் கட்சியின் வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப்பும் போட்டியிட்டினர்.
அமெரிக்காவில் ஒட்டுமொத்தமாக 538 வாக்காளர்கள் குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் குறைந்தது 270 உறுப்பினர்களின் வாக்குகளை பெறும் வேட்பாளர், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றவர் என்று அறிவிக்கப்படுவார்.
இதையும் படியுங்கள் : IPLAuction2025 | முதன்முறையாக பதிவு செய்தார் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன்!
இந்திய நேரப்படி இன்று காலை 5 மணி அளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. அப்போதிருந்தே குடியரசுக் கட்சியின் வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தார். இந்நிலையில், டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று அதிபராக தேர்வாகி உள்ளார். இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்பிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது :
" அமெரிக்காவில் வரலாற்று சிறப்புமிக்க தேர்தல் வெற்றி பெற்ற என் நண்பர் டொனால்ட் டிரம்ப்பிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தியா-அமெரிக்க விரிவான உலகளாவிய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த எங்கள் ஒத்துழைப்பைப் புதுப்பிக்க நான் எதிர்நோக்குகிறேன்.நமது மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றை மேம்படுத்தவும் நாம் பாடுபடுவோம்"
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.