அயோத்தி கோயிலில் குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்தார் பிரதமர் நரேந்திர மோடி!
அயோத்தி ராமர் கோயிலில், குழந்தை ராமர் சிலையை பிரதமர் நரேந்திர மோடி பிரதிஷ்டை செய்தார்.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து கடந்த 2020 ஆகஸ்ட் முதல் பூமி பூஜை செய்யப்பட்டு அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2.27 ஏக்கர் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமர் கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடையவுள்ள நிலையில், கோயில் கருவறையில் மூலவர் குழந்தை ராமர் சிலை இன்று பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பதற்காக பிரதமர் மோடி கடந்த 11 நாட்கள் தீவிரமாக விரதம் கடைப்பிடித்து வந்தார். பிரம்ம முகூர்த்தத்தில் கண்விழிக்கும் பிரதமர் மோடி ராம மந்திரங்களை உச்சரிப்பதோடு, உணவாக பழங்களை மட்டும் இளநீர் பருகினார். மேலும் மரக்கட்டிலில் போர்வை விரித்து தூங்கினார்.
தொடர்ந்து, 1 மணி முதல் 2 மணி வரை அயோத்தியில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளதாகவும், பின்னர், 02.10 மணியளவில், குபேர் திலா சிவன் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் 03.30 மணியளவில் பிரதமர் மோடி டெல்லி திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.