இடைக்கால பிரதமர் சுசிலா கார்கிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!
நேபாளத்தில் சமூக வலைதள தடை மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளைக் தொடர்ந்து ஏற்பட்ட இளைஞர்கள் போராட்டத்தால் கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி பிரதமர் சர்மா ஒலி பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் நேற்று இடைக்கால பிரதமராக அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசிலா கார்கி (73) பதவியேற்றார்.
அதேபோல் நேபாள நாடாளுமன்றமும் கலைக்கப்பட்டு அடுத்த வருடம் மார்ச் 21ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இடைக்கால பிரதமராக பதவியேற்றுள்ள சுசிலா கார்கிக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தாளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், "நேபாள இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள சுசிலா கார்கிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேபாள மக்களின் அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.