"பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகை ஒத்திவைப்பு!" - பாஜக மாநிலத் துணைத்தலைவர் கரு.நாகராஜன்!
பிரதமர் நரேந்திர மோடி 20ம் தேதி தமிழ்நாடு வருகை தர இருந்த நிகழ்ச்சி ஒத்திக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் துணைத்தலைவர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
18வது மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து மத்தியில் மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்ற பிரதமர் மோடி, இத்தாலியின் அபுலியா நகரில் நடைபெற்ற 50-வது ஜி7 உச்சிமாநாட்டில் கலந்துகொண்டார். பதவியேற்றபின், முதல் வெளிநாட்டு பயணமாக பிரதமர் மோடி இத்தாலி சென்றுள்ளார்.
இந்நிலையில், நாகர்கோவில் - சென்னை இடையே வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்க பிரதமர் மோடி வருகின்ற 20ம் தேதி தமிழ்நாடு வருவதாக தகவல் வெளியானது. ஆனால், தற்போது அந்த பயணம் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள் : மனித விரலைத் தொடர்ந்து பூரான்! ஐஸ்கிரீம் சாப்பிட நினைத்தது ஒரு குத்தமா?
இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது :
"பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 20ம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகை தர இருந்த நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. பிரதமர் மோடி வருகை தொடர்பான மறு தேதி பின்னர் திட்டமிட்டு அறிவிக்கப்படும்"
இவ்வாறு அவர் தெரிவித்தார்.