குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கருக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!
குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கருக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
10:22 AM May 18, 2025 IST
|
Web Editor
Advertisement
குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர் பிறந்தநாளையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கருக்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,
Advertisement
"குடியரசு துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் தன்கருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். முன்னணி வழக்கறிஞராக அவர் ஆற்றிய பல ஆண்டுகாலப் பணியின் அடிப்படையில், நமது அரசியலமைப்புச் சட்டம் குறித்த அளப்பரிய அறிவைப் பெற்றவர் அவர். மாநிலங்களவையின் உற்பத்தித்திறனை அதிகரிக்க அவர் பாராட்டத்தக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
சமூகத்திற்கு சேவை செய்வதில் அவருக்கு உள்ள ஆர்வமும் மகத்தானது. அவர் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழட்டும்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Article