Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

 "ஹிண்டன்பர்க் விவகாரத்தில் பிரதமர் மோடியும் சிக்குவார்" - கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு!

07:47 AM Aug 13, 2024 IST | Web Editor
Advertisement

ஹிண்டன்பர்க் விவகாரத்தில் பிரதமர் மோடியும் சிக்குவார் என்ற பயத்தினால் தான் அது குறித்த விசாரணையை நடத்த மறுக்கிறார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisement

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வீடு இல்லாத மக்களுக்கு அரசு சார்பில் வீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நடைபெற்றது. நாடு முழுவதும் வரி செலுத்துவோர் எண்ணிக்கைகளுக்கு ஈடாக அன்றாடம் பிழைப்பு நடத்துவரின் எண்ணிக்கைகள் அதிகரித்து வருகிறது. இதனால் இவ்வாறான ஏழைகள் தங்கள் வசிப்பதற்காக தங்களுக்கு சொந்தமாக ஒரு இடம் கூட இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இம்மாதிரியான சூழ்நிலையை கண்டித்து நாடு முழுவதும் உள்ள வீடு இல்லாத மக்களுக்கு வசிப்பிடத்தை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் வடக்கு ரத விதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநாடு நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில
செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். பின்னர், அவர்  செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அவர் கூறியதாவது :

"நாடு முழுவதும் பெரும்பாலான ஏழைகள் வீடு இல்லாமல் இருப்பதால் அவர்களுக்கான
வசிப்பிடத்தை உறுதி செய்ய வலியுறுத்தி அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும் என்ற
கோரிக்கையை முன்னிறுத்தி தற்போது இந்த மாநாடு நடைபெற்றுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரின் இன்றைய அறிவிப்பான மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர் உதவித்தொகை பெரும் நபர்கள் உள்ள வீட்டில் வசிக்கும் பெண்களும் தங்களது உரிமை தொகையை பெறலாம் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

இதையும் படியுங்கள் : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 43,000 கன அடியாக அதிகரிப்பு!

ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தேசிய அளவில் பங்கு சந்தையில் பெரும் முறைகேடு நடந்திருப்பதாகவும் இதனால் பொதுமக்களுக்கு பெருமளவு பாதிப்பு ஏற்படும். பங்கு சந்தையை கண்காணிக்க கூடிய செபி அமைப்பும் கூட தற்போது தனக்கும் இந்த விவகாரத்திற்கும் சம்பந்தமில்லை என்ற ஒதுங்குவது
கண்டிக்கத்தக்கது.

இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணையை மேற்கொள்ள பிரதமர் மோடி அனுமதிக்க வேண்டும். பிரதமர் நரேந்திர மோடியும் இந்த விசாரணை வளையத்தில் வந்து விடுவார் என்ற பயத்தினாலேயே கூட்டுக் குழு விசாரணைக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டு பொதுமக்களுக்கான முதலீட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும்"

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags :
BalakrishnanHindenburgMarxist Communist Partymodiprime ministerState Secretary
Advertisement
Next Article