Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பிக்கு பிரதமர் #Modi பாராட்டு!

05:25 PM Dec 29, 2024 IST | Web Editor
Advertisement

உலக மகளிருக்கான ரேபிட் செஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை கோனேரு ஹம்பிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

Advertisement

அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற உலக ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவின் கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார். இறுதிப் போட்டியில் இந்தோனேசியாவை சேர்ந்த ஐரீன் சுகந்தரை எதிர்கொண்டு விளையாடிய கொனேரு ஹம்பி 11 புள்ளிகளில் 8.5 புள்ளிகளுடன் போட்டியை முடித்தார்.

இந்த வெற்றியின் மூலம் சீனாவின் ஜூ வென்ஜூனுக்கு பிறகு அதிக முறை சாம்பியன் பட்டம் வென்றவர்கள் பட்டியலில் கொனேரு ஹம்பி இரண்டாவது இடத்தில் உள்ளார். உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இவர் பட்டம் வெல்வது இது 2-வது முறையாகும். இந்த நிலையில், பிடே மகளிர் உலக ராபிட் செஸ் சாம்பியன் பட்டம் வென்ற கோனேரு ஹம்பிக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,

"2வது முறையாக உலக ரேபிட் செஸ் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார் கோனேரு ஹம்பி. இதன்மூலம் இப்படி ஒரு நம்பமுடியாத, மகத்தான சாதனையை நிகழ்த்திய ஒரே இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். உங்களின் புத்திசாலித்தனம் பலரையும் ஊக்குவிக்கட்டும்"

இவ்வாறு பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

Advertisement
Next Article