Run It Up பாடலுக்காக Hanumankind-ஐ பாராட்டிய பிரதமர் மோடி!
பிரதமர் மோடியால் நடத்தப்படும் இந்திய வானொலி நிகழ்ச்சி ‘மன் கி பாத்’. மாதந்தோறும் நடக்கும் இந்த நிகழ்ச்சியின் 130வது எபிசோட் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி ராப் பாடகர் Hanumankind-ஐ பாராட்டியுள்ளார்.
அந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, “நமது பாரம்பரிய விளையாட்டுகள் இப்போது பிரபலமான கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறி வருகின்றன. நீங்கள் அனைவரும் பிரபல ராப் பாடகர் Hanumankind-ஐ அறிந்திருக்க வேண்டும். அவரது புதிய பாடல் 'ரன் இட் அப்' இப்போது மிகவும் பிரபலமாகி வருகிறது. நமது பாரம்பரிய தற்காப்புக் கலைகளான களரிபயட்டு, கட்கா மற்றும் தங்-தா ஆகியவை பாடலில் சேர்க்கப்பட்டுள்ளன. அவர் முயற்சியால் உலக மக்கள் நமது பாரம்பரிய தற்காப்புக் கலைகளைப் பற்றி அறிந்து கொள்கிறார்கள் என்பதற்கு நான் அவரைப் பாராட்டுகிறேன்” இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
Hanumankind கடந்த 2024 ஆண்டில் 'Big Dawgs' என்ற பாடிலை வெளியிட்டார். இப்பாடல் யூடியூபில் 220 மில்லியன் பார்வைகளை கடந்து நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து Hanumankind, 3 வாரங்களுக்கு முன்பு Run It Up பாடலை வெளியிட்டார். இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகிறது