Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

புது பொலிவுடன் DD தமிழ் தொலைக்காட்சி ஒளிபரப்பை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

07:44 PM Jan 19, 2024 IST | Web Editor
Advertisement

கேலோ இந்தியா விளையாட்டு தொடக்க விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, புது பொலிவுடன் அதிநவீன தொழில்நுட்பத்துடன் DD தமிழ் ஒளிபரப்பை தொடங்கி வைத்தார். 

Advertisement

மூன்று நாள் பயணமாக இன்று தமிழகம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தற்பொழுது சென்னையில் நடைபெறும் "கேலோ இந்தியா" விளையாட்டு போட்டிகளின் துவக்க நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார்.

18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் நடத்தப்படும் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் இன்று துவங்கி வருகின்ற ஜனவரி 31ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய நான்கு மாவட்டங்களில் இந்த விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் 11 நாட்கள் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் முதல் முறையாக இந்த கேலோ இந்தியா போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், இதில் சுமார் 36 மாநிலங்களைச் சேர்ந்த 5500க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இந்த கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் மொத்தம் 27 வகையான பிரிவில் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் துவக்க விழாவில் பங்கேற்க இன்று மாலை 4 மணியளவில் பெங்களூருவில் இருந்து புறப்பட்ட நரேந்திர மோடி , சுமார் 4 மணி 50 நிமிடங்களுக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார். தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் கே என் நேரு, துரைமுருகன் ஆகியோர் அவரை வரவேற்றனர்.

நேரு வெளி விளையாட்டு அரங்கத்தில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா, தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இதையடுத்து,  பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசு வழங்கி வரவேற்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு நினைவுப் பரிசு வழங்கி வரவேற்றார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். மேலும் இந்நிகழ்வில் பங்கேற்ற மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர், மத்திய இணை அமைச்சர்கள் நிஷித் பிராம்னிக், எல்.முருகன் மற்றும் தமிழ்நாடு அமைச்சர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.

நேரு வெளி விளையாட்டு அரங்கத்தில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்த்தினார். இதனை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

இதனை அடுத்து பிரதமர் மோடி, DD பொதிகை தொலைக்காட்சியை புது பொலிவுடன் அதிநவீன தொழில்நுட்பத்துடன் DD தமிழ் ஒளிபரப்பை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

Tags :
DD PodhigaiDD Tamilkhelo indiaKhelo India Youth GamesKhelo India Youth Games TNNarendra modiNehru Stadiumnews7 tamilNews7 Tamil UpdatesPMO Tamilnaduudayanidhi stalin
Advertisement
Next Article