பிரதமர் மோடி ஒரு புத்திசாலி மனிதர் - அதிபர் ட்ரம்ப்!
பிரதமர் மோடி ஒரு புத்திசாலி என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் வர்த்தகம் தொடர்பாக பேசிய அவர்,
“பிரதமர் மோடி சமீபத்தில்தான் இங்கு வந்தார். நாங்கள் எப்போதும் நல்ல நண்பர்கள். உலகிலேயே அதிக வரி விதிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அது மோசமானது. அவர் (மோடி) மிகவும் புத்திசாலி மனிதர், உண்மையில் என்னுடைய சிறந்த நண்பர், நாங்கள் மிகவும் நல்ல பேச்சுவார்த்தை நடத்தினோம். இந்தியாவிற்கும், நமது நாட்டிற்கும் இடையேயான வர்த்தக பேச்சு வார்த்தைகள் நன்றாக வேலை செய்யும் என்று நான் நினைக்கிறேன்.
நாங்கள் விரைவில் பரஸ்பர வரிகளை விதிப்போம். அவர்கள் எங்களிடம் கட்டணம் வசூலிக்கிறார்கள், நாங்கள் அவர்களிடம் கட்டணம் வசூலிக்கிறோம். அது இந்தியா, சீனா போன்ற ஒரு நாடாக இருந்தாலும் சரி அல்லது ஒரு நிறுவனமாக இருந்தாலும் சரி, நாங்கள் நியாயமாக இருக்க விரும்புகிறோம், எனவே, பரஸ்பர விதிகள் விதிக்கப்படும்” என தெரிவித்தார்.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற ஒரு மாதத்திற்குள் பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளின் தேசிய பாதுகாப்பு, வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.