திருப்பதியில் பிரதமர் மோடி - ஏழுமலையானை தரிசித்து வழிபாடு..!
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை திருப்பதிக்கு வந்த பிரதமர் மோடி
இன்று காலை 8 மணிக்கு ஏழுமலையானை தரிசித்தார்.
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று மாலை திருப்பதிக்கு வந்த பிரதமர் மோடி. திருப்பதி மலையில் உள்ள ரக்ஷனா விருந்தினர் மாளிகையில் பிரதமர் தங்கினார்.
இதனைத் தொடர்ந்து இன்று காலை பிரதமர் 8 மணிக்கு கோவில் முன்வாசலை அடைந்து திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கிறார்.
இதனைத் தொடர்ந்து காலை 8:50 மணிக்கு கோவிலில் இருந்து புறப்படும் பிரதமர் 8:55 மணிக்கு விருந்தினர் மாளிகையை அடைந்து பின்னர் மணி 9:30 க்கு திருப்பதி மலையில் இருந்து புறப்பட்டு மணி 10:20க்கு திருப்பதி விமான நிலையத்தை அடைய உள்ளார்.
நிலையத்தில் இருந்து புறப்படும் மோடி பகல் மணி 11:30 க்கு தெலங்கானா மாநிலம்
ஹக்கின்பெட் விமான நிலையத்தை அடைய இருக்கிறார்.
பிரதமர் சுற்றுப்பயணத்தை முன்னிட்டு திருப்பதி மலை முழுவதும் தீவிர பாதுகாப்பு
ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக சுமார் 3 ஆயிரம்
போலீசார் திருப்பதி மலையில் குவிக்கப்பட்டுள்ளனர். அவர் தங்கியிருக்கும் விருந்தினர் மாளிகை, ஏழுமலையான் கோவில் பாதுகாப்பு ஆகியவற்றை பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினர் தாங்கள் பொறுப்பில் எடுத்துக் கொண்டுள்ளனர்.
அளிக்கப்பட்டது.
ஊடகங்களுக்கு அனுமதி இல்லை
பிரதமர் மோடியின் வருகை தொடர்பாக களத்தில் செய்தி சேகரிக்கவும், புகைப்படம் எடுக்கவும், வீடியோ எடுக்கவும் திருப்பதி மலையில் ஊடகங்களுக்கு முழு அளவில் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.