Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

தேசிய பொறியாளர்கள் தினத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து!

தேசிய பொறியாளர்கள் தினத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
12:21 PM Sep 15, 2025 IST | Web Editor
தேசிய பொறியாளர்கள் தினத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Advertisement

இந்தியாவின் தலைசிறந்த பொறியாளர்களில் ஒருவராக அறியப்படும் எம்.விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்தநாளையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் செப்.15-ம் தேதி ‘தேசிய பொறியாளர்கள் தினம்’கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (செப்.15) தேசிய பொறியளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

Advertisement

இந்த நிலையில், இதுகுறித்து பிரதமர் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,

“பொறியாளர்கள் தினமான இன்று, இந்தியாவின் பொறியியல் துறையில் ஒரு அழியாத முத்திரையைப் பதித்த எம்.விஸ்வேஸ்வரய்யாவுக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். தங்கள் படைப்பாற்றல் மற்றும் உறுதிப்பாட்டின் மூலம், புதுமைகளை புகுத்தி, கடுமையான சவால்களை சமாளிக்கும் அனைத்து பொறியாளர்களுக்கும் நான் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிகளில் நமது பொறியாளர்கள் தொடர்ந்து முக்கிய பங்கு வகிப்பார்கள்”

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்

Tags :
EngineersEngineers DayNarendra modiNational Engineers DayPM ModiPMO India
Advertisement
Next Article