Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கனடாவிலும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்! - பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு!

01:29 PM Apr 02, 2024 IST | Web Editor
Advertisement

கனடாவில் பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தபடும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.

Advertisement

சமீபத்தில் கனடாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,  18 லட்சம் குழந்தைகள்,  போதிய உணவு கிடைக்காமல் பள்ளிக்கு வந்து செல்வதாக தெரிய வந்துள்ளது.  இதையடுத்து, கனடாவில் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம் வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்த உள்ளனர்.

இதையும் படியுங்கள் : “கச்சத்தீவு விவகாரத்தில் பாஜகவினர் கூறுவது பச்சை பொய்!” – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடும் தாக்கு!

கனடாவில் பள்ளிக் குழந்தைகளுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டு வரும் சூழலில்,  வெறும் 21 சதவிகித குழந்தைகள் மட்டுமே இந்த திட்டத்தால் பயனடைகிறார்கள்.  இந்த திட்டத்தை  அனைத்து மாணவர்களும் பயனடையும் வகையில் ழுழு உணவு வழங்கும் திட்டமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.  கடந்த தேர்தல் அறிக்கையில் இந்த திட்டம் குறித்த வாக்குறுதியை  பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அளித்திருந்தார்.  அதன்படி, அடுத்த 5 ஆண்டுகளில் இத்திட்டத்திற்காக 1 பில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் அமல்படுத்தப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.  இதன் முலம் மாணவர்கள் பயன் பெற்று வருகிறனர்.  தமிழ்நாட்டை அடுத்து,  தெலங்கானா மாநிலத்தில் உள்ள பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் கொண்டுவரப்பட்டது.

Tags :
announcedCanadaJustin Trudeaumeal plannational schoolprime minister
Advertisement
Next Article