Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று மணிப்பூர் பயணம்!

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 2 நாள் அரசு முறைப் பயணமாக இன்று மணிப்பூர் செல்கிறார்.
06:27 AM Dec 11, 2025 IST | Web Editor
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு 2 நாள் அரசு முறைப் பயணமாக இன்று மணிப்பூர் செல்கிறார்.
Advertisement

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த 2023ஆம் ஆண்டு குக்கி மற்றும் மெய்தி இனக்குழுக்களுக்கு இடையே பெரும் கலவரம் மூண்டது. இந்த கலவரத்தினால் 260 பேர் உயிரிழந்தனர். மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த கலவரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மணிப்பூர் முதலமைச்சர் என். பிரேன் சிங் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பிப்ரவரி முதல் மணிப்பூர் குடியரசுத் தலைவரின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

Advertisement

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, இன்றும் நாளையும் (டிச.11,12)  மணிப்பூருக்கு அரசுமுறைப்பயணம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 

“டிசம்பர் 11 ஆம் தேதி (இன்று), மணிப்பூ தலைநகர் இம்பாலுக்கு வருகை தரும் குடியரசுத் தலைவர் வரலாற்று சிறப்புமிக்க மாபல் காங்ஜீபங்கிற்குச் சென்று போலோ கண்காட்சிப் போட்டியைக் காண்கிறார். அதே நாள் மாலையில், இம்பாலில் உள்ள நகர மாநாட்டு மையத்தில் மணிப்பூர் அரசு நடத்தும் குடிமை வரவேற்பு நிகழ்ச்சியில் ஜனாதிபதி கலந்து கொள்கிறார். டிசம்பர் 12 ஆம் தேதி, இம்பாலில் உள்ள நுபி லால் நினைவு வளாகத்திற்கு வருகை தரும் குடியரசுத் தலைவர் மணிப்பூரின் துணிச்சலான பெண் வீரர்களுக்கு மரியாதை செலுத்துகிறார். பின்னர், அவர் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் மற்றும் தொடங்கி வைக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :
Droupadi MurmuLatest NewsManipurPresidentPresident of India
Advertisement
Next Article