Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

நீண்ட காத்திருப்புக்கு பின் நடிகர் பிரசாந்தின் 'அந்தகன்' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

09:44 PM Jun 28, 2024 IST | Web Editor
Advertisement

பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள   ‘அந்தகன்’  திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 

Advertisement

வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரசாந்த்.  இவர் 90களின் காலகட்டத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தார.  நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் 'அந்தகன்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.  பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியான  'அந்தாதூன்' படத்தை தமிழில் 'அந்தகன்' என்ற பெயரில் ரீமேக் செய்தனர்.

இத்திரைப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ளார்.  இதில் சிம்ரன், வனிதா,  இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்,  யோகிபாபு,  பிரியா ஆனந்த்,  சமுத்திரகனி என ஏராளமானோர் நடித்துள்ளனர்.  இந்தப் படம் பிரஷாந்தின் சினிமா கரியருக்கு ரீ- எண்ட்ரியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தப் படம் உருவாகி பல வருடங்கள் ஆகியும் வெளிவராமல் இருந்தது.

இந்த நிலையில்,  ‘அந்தகன்’  திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.  பிரசாந்த் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'கோட்'  திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
Andhaganmovie updatePrashanthsanthosh narayananSimranThiagaragan
Advertisement
Next Article