Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிரசாந்த் நடிப்பில் உருவாகியுள்ள `அந்தகன்' திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு!

06:06 PM Jul 13, 2024 IST | Web Editor
Advertisement

பிரசாந்த் நடிப்பில் நீண்ட நாட்களாக படப்பிடிப்பில் இருந்த அந்தகன் படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது.

Advertisement

பிரசாந்த் 90-களின் காலகட்டத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர். நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் நடிக்கும் திரைப்படம் 'அந்தகன்'. பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான 'அந்தாதூன்' படத்தை தமிழில் 'அந்தகன்' என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர்.

இதில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். இதற்காக அவர் பிரத்யேகமாக பியானோ பயிற்சி பெற்றுள்ளார். மேலும் இப்படத்தில் சிம்ரன், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகிபாபு, பிரியா ஆனந்த், சமுத்திரகனி என ஏராளமானோர் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜன் இயக்கியுள்ளார்.

'அந்தகன்' படமானது நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் நிலுவையில் இருந்த நிலையில் தற்போது படம் 2024 ஆகஸ்ட் மாதத்தில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகும் இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. சஸ்பென்ஸ் திரில்லர் ஜானரில் உருவாக்கியிருந்த இப்படம், பிரசாந்துக்கு நல்ல கம் பேக் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'கோட்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பிரசாந்த்.

Tags :
AndhaganPrasanthTrailer
Advertisement
Next Article