“ஆதித்திராவிடர் நலத்துறை அமைச்சர் பொறுப்பை அருந்ததியர் சமூகத்திற்கு வழங்கிய #DMK தலைவருக்கு பாராட்டு” - திராவிடத் தமிழர் கட்சி தலைவர் வெண்மணி!
ஆதித்திராவிடர் நலத்துறை அமைச்சர் பொறுப்பை அருந்ததியர் சமூகத்திற்கு வழங்கிய திமுக தலைவருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் பாராட்டு தெரிவித்து திராவிடத் தமிழர் கட்சி தலைவர் வெண்மணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து திராவிடத் தமிழர் கட்சியின் தலைவர் வெண்மணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“பெரியார், அண்ணா, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆகியோர் பன்படுத்தி கொடுத்த பாதையில் தமிழ்நாடு அரசை சமூகநீதி அரசாக நடத்தி வரும் திமுக தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு திராவிட தமிழர் கட்சியின் சார்பிலும், அருந்ததியர் மக்கள் சார்பிலும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழ்நாட்டின் சமூகநீதி வரலாற்றில் கடந்த காலங்களில் முன் எப்போதும் இல்லாத வகையில் பட்டியல் சமூகத்தைச் சார்ந்த மருத்துவர் மதிவேந்தன், கோவி.செழியன், கயல்விழி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட 4 பேருக்கு அமைச்சரவையில் முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உயர்கல்வி துறையும், மனிதவள துறையின் அமைச்சர்களாக பட்டியல் சமூகத்தைச் சோர்ந்தவர்கள் பொறுப்பு வகிப்பது பெருமைக்குரியதாகும். திமுக தலைவர் சமூகநீதி என்னும் தத்துவத்தையும் தாண்டி சமநீதியைக் நோக்கி நம்மை அழைத்து செல்கிறார்.
கடந்த காலங்களில் ஆதித்திராவிடர் நலத்துறை அமைச்சர் பொறுப்பை அருந்ததியர் சமூகத்தைச் சார்ந்த யாருக்கும் வழங்கப்படதா நிலையில் பட்டியல் சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள அருந்ததியர் மக்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் ஆதித்திராவிட நலத்துறை அருந்ததியர் சமூகத்தை சேர்ந்த மருத்துவர்.மதிவேந்தன் அமைச்சராக அவர்களுக்கு வழங்கப்பட்டு அருந்ததியர் மக்களுக்கு பெருமை சேர்த்த திமுக தலைவர், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு திராவிட தமிழர் கட்சியின் சார்பிலும் அருந்ததியர் மக்கள் சார்பிலும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்”
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.