Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் "லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி" - பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

10:15 AM Jul 25, 2024 IST | Web Editor
Advertisement

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Advertisement

'போடா போடி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகி 'நானும் ரவுடி தான்' திரைப்பட வெற்றிக்கு பிறகு விக்னேஷ் சிவன், 'தானா சேர்ந்த கூட்டம்', 'காத்துவாக்குல ரெண்டு காதல்' ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இதையடுத்து, தற்போது எல்.ஐ.கே (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன், கதாநாயகியாக கிருத்தி ஷெட்டி நடித்து உள்ளனர். எஸ்.ஜே சூர்யா இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ளது.

இதையும் படியுங்கள் :3 தலைமுறையாக அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கும் மலைவாழ் மக்கள் – அரசு நடிவடிக்கை எடுக்க கோரிக்கை!

இந்த திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேஷியாவில் படமாக்கப்பட்டு இருக்கிறது. படத்தின் பின்னணி வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக்கை இன்று காலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதனை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருவதால் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags :
#cinemaupdatesanirudhLove Insurance kompanypradeeprajarowdy pictureVigneshShivan
Advertisement
Next Article