Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிரதீப் ரங்கநாதனின் புதிய படத்தின் தலைப்பு வெளியானது!

02:35 PM May 05, 2024 IST | Web Editor
Advertisement

இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதனின் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பினை படக்குழு வெளியிட்டது.

Advertisement

இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக நடிக்க இருக்கும் திரைப்படத்தின் அறிமுக வீடியோ கடந்த மாதம் 12 ஆம் தேதி வெளியிடப்பட்டது. 'ஓ மை கடவுளே' திரைப்படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இந்த திரைப்படத்தை இயக்க உள்ளார்.

கலகலப்பான காட்சிகள் நிறைந்த புதிய திரைப்படத்தின் அறிமுக வீடியோ, அஸ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் இடையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற உண்மை கதையை தழுவி உருவாக்கப்பட்டு இருந்தது. இந்த புதிய திரைப்படத்தின் தலைப்பு இன்று காலை 9 மணி அளவில் வெளியிடப்படும் என படக் குழுவினர் அறிவித்தது.

'கோமாளி' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோர் நடிப்பி வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து 'லவ் டுடே' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

லவ் டுடே' திரைப்படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. 'லவ் டுடே'  திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன் தமிழ் திரையுலகில் முக்கியமான நபராக உருவெடுத்துள்ளார்.

இந்த நிலையில் இன்று காலை புதிய படத்தின் தலைப்பு வெளியாகும் என  அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பிற்பகல் இப்படத்தின் தலைப்பினை படக்குழு வெளியிட்டது. அதன்படி இப்படத்திற்கு டிராகன் என பெயரிடப்பட்டுள்ளது.

Tags :
actor Pradeep RanganathanArchana KalpathiDragonPradeep Ranganathan
Advertisement
Next Article