Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

விக்னேஷ் சிவனுடன் இணையும் பிரதீப் ரங்கநாதன்... படத்தின் தலைப்பு இதுவா?

11:04 AM Dec 15, 2023 IST | Web Editor
Advertisement

விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ளார்.

Advertisement

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கவிருந்தது.  ஆனால், சில பிரச்னைகளால் அப்படம் கைவிடப்பட்டது.  இந்த நிலையில், 'லவ் டுடே' புகழ் பிரதீப் ரங்கநாதனை வைத்து விக்னேஷ் சிவன் புதிய படத்தை இயக்கவுள்ளார்.
காதல் கதையாக உருவாகும் இப்படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நெஷனல் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது.

இதையும் படியுங்கள்: கேப்டன் மில்லர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது? 

இதற்கான,  அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.  இந்நிலையில்,  தயாரிப்பாளர் லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இப்படத்திற்கு லவ் இன்சுரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்ஐசி) எனப் பெயரிட்டுள்ளனர். பிரதீப்புக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளார்.  முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார்.  இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

Tags :
anirudhKrithi ShettyLICLove Insurance Corporationmovie updatesnews7 tamilNews7 Tamil UpdatesPradeep Ranganathansj suryavignesh shivan
Advertisement
Next Article