Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் #LoveInsuranceKompany - புதிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

07:39 PM Sep 07, 2024 IST | Web Editor
Advertisement

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Advertisement

போடா போடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ‘நானும் ரவுடி தான்’ திரைப்பட வெற்றிக்கு பிறகு விக்னேஷ் சிவன், ‘தானா சேர்ந்த கூட்டம்’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். இதையடுத்து, தற்போது எல்.ஐ.கே (லவ் இன்ஷூரன்ஸ் கம்பெனி) என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக பிரதீப் ரங்கநாதன், கதாநாயகியாக கிருத்தி ஷெட்டி நடித்து உள்ளனர். எஸ்.ஜே சூர்யா இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அனிருத் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரித்துள்ளது.

இந்த திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் சிங்கப்பூர் மற்றும் மலேஷியாவில் படமாக்கப்பட்டு இருக்கிறது. இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.  இந்த நிலையில், 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

Tags :
anirudhcinema updateGlimpseLIKLik UpdatePradeep Ranganathantamil cinemavignesh shivan
Advertisement
Next Article