“தல வந்தா தள்ளிப் போய்தான ஆகனும்” - ‘டிராகன்’ படத்தின் ரீலீஸ் தள்ளிப்போவதாக பிரதீப் ரங்கநாதன் அறிவிப்பு!
‘ஓ மை கடவுளே’ படத்தின் வெற்றிக்குப் பிறகு அஸ்வத் மாரிமுத்து இயக்கிவரும் திரைப்படம் ‘டிராகன்’. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், கே.எஸ். ரவிக்குமார், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசையில் இப்படத்திலிருந்து ‘ரைஸ் ஆப் தி டிராகன்’ மற்றும் ‘வழித்துணையே’ ஆகிய இரு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது.
இப்படம் வருகிற காதலர் தினத்தின்று (பிப்.14) வெளியாகும் என படக்குழு பொங்கல் வாழ்த்து போஸ்டரில் தெரிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாகும் என அறிவித்தது. டிராகன் படம் வெளியாகும் சில நாட்கள் முன்பு விடாமுயற்சி படம் வெளியாகவிருப்பதால் டிராகன் படத்தின் ரீலிஸ் தேதி தள்ளிப்போவதாக படக்குழு அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பிரதீப் ரங்கநாதன் தனது எக்ஸ் பதிவில், “தல வந்தா தள்ளிப் போய்தான ஆகனும்” என்று கூறியதோடு டிராகன் படம் வருகிற பிப்ரவரி 21ஆம் தேதி வெளியாகும் தெரிவித்துள்ளார்.