Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ரூ.1000 கோடி வசூலித்த பிரபாஸின் ‘கல்கி 2898 ஏடி’!

04:23 PM Jul 13, 2024 IST | Web Editor
Advertisement

பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் உலக அளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisement

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘கல்கி 2898’. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உட்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம், பான் இந்தியா முறையில் ஜூன் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

அறிவியல் – புராண கதை மிக்சிங்கில் உருவான இப்படம் அதன் அட்டகாசமான கிராஃபிக்ஸ் மறு்றும் மேக்கிங் காட்சிகளில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது.  இருப்பினும் திரைக்கதை சோர்வைத் தருவதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.  இந்த சூழலில் ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இந்த திரைப்படம் முதல் நாளில் உலக அளவில் ரூ.191 கோடியும், இரண்டாம் நாளில் மொத்தம் ரூ.295.5 கோடி வரை வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது.

இந்த திரைப்படம் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.  தற்போது ‘கல்கி 2898’ திரைப்படம் வெளியாகி 17 நாட்களில் ஆன நிலையில், உலக அளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Tags :
1000 CroreAmitabh Bachchanbox officecinema updateDeepika padukoneKaliKalki Box Office CollectionKalki2898 ADKamal haasanPrabhas
Advertisement
Next Article