பிரபாஸ் நடிக்கும் ‘ஸ்பிரிட்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்...!
அர்ஜுன் ரெட்டி, கபீர் சிங் மற்றும் அனிமல் ஆகிய படங்களை இயக்கியவர் சந்தீப் ரெட்டி வாங்கா. இவரின் படங்கள் சர்ச்சைகளையும் உருவாக்கியிருந்தாலும் வசூல்ரீதியாக பெரும் வெற்றியை பெற்றன.
இந்த நிலையில் சந்தீப் ரெட்டி வாங்கா ’ஸ்ப்ரிட்’ படத்தை இயக்கி வருகிறார். டி சீரிஸ் உடன் பத்ரகாளி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் பிரபாஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். மேலும் திரிப்தி டிம்ரி, விவேக் ஓபராய், காஞ்சனா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
போலீஸ் தொடர்பான கதைக்களத்தை கொண்ட இந்தப் படத்தின் வில்லனாக டான் லீ என்றழைக்கப்படும் பிரபல கொரியன் நடிகர் மா டோங்-சியோக் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் ஸ்பிரிட் படத்தின் படபிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. இதில் படக்குழுவுடன் மெகாஸ்டார் சிரஞ்சீவியும் பங்குபெற்றார்.
பூஜையில் நடிகர் பிரபாஸ் கலந்துகொள்ளவில்லை. இந்தப் படத்தில் அவரது புதிய தோற்றம் வெளிப்படக்கூடாது என்பதற்காகவே பிரபாஸ் பூஜையில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.