Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிரபாஸின் ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் - உலகம் முழுவதும் ரூ.800 கோடி வசூல்!

08:08 PM Jul 06, 2024 IST | Web Editor
Advertisement

பிரபாஸ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் வெளியான 9 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.800 கோடிக்கும் அதிமாக வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘கல்கி 2898’. இதில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உட்பட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம், பான் இந்தியா முறையில் ஜூன் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

அறிவியல் - புராண கதை மிக்சிங்கில் உருவான இப்படம் அதன் அட்டகாசமான கிராஃபிக்ஸ் மறு்றும் மேக்கிங் காட்சிகளில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகிறது. இருப்பினும் திரைக்கதை சோர்வைத் தருவதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் முதல் நாளில் உலக அளவில் ரூ.191 கோடியும், இரண்டாம் நாளில் மொத்தம் ரூ.295.5 கோடி வரை வசூலித்ததாக அறிவிக்கப்பட்டது. தற்போது இந்தப் படம் 9 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.800 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. படம் பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.1,000 கோடி வரை வசூலிக்கலாம் என கணிக்கப்படுகிறது.

Tags :
Cinema updatesi kamal haasanKalkiKalki 2898 ADkamalKamal haasanNews7Tamilnews7TamilUpdates
Advertisement
Next Article