Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

திருப்பதி தேவஸ்தானம் | 54வது அறங்காவலர் குழு தலைவராக பிஆர் நாயுடு பதவியேற்பு!

01:03 PM Nov 06, 2024 IST | Web Editor
Advertisement

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் 54ஆவது அறங்காவலர் குழுவின் தலைவராக இன்று பிஆர் நாயுடு பொறுப்பேற்று கொண்டார்.

Advertisement

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கான அறங்காவலர் குழு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படுவது வழக்கம். அதன்படி கடந்த ஜெகன்மோகன் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட தேவஸ்தான அறங்காவலர் குழு, சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டதால், முழுமையாக கலைக்கப்பட்டது.

ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்ற நிலையில் புதிய அறங்காவலர் குழு அமைப்பதில் காலதாமதம் ஆனது. இதனையடுத்து திருப்பதி தேவஸ்தானத்துக்கான அறங்காவலர் குழு கடந்த 30ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் குழு தலைவராக தொல்லினேனி ராஜகோபால் நாயுடு (பி.ஆர்.நாயுடு) நியமிக்கப்பட்டார். உறுப்பினர்களாக எம்எல்ஏக்கள் ஜோதுலா நேரு, பிரசாந்திரெட்டி, எம்.எஸ்.ராஜூ, பனபாக லட்சுமி (முன்னாள் மத்திய அமைச்சர்), உள்பட 24 பேர் நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் 54 ஆவது அறங்காவலர் குழு தலைவராக பி. ஆர். நாயுடு இன்று பதவியேற்றார். இன்று காலை ஏழுமலையான் கோயிலில் பிஆர் நாயுடு பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு நிகழ்ச்சிக்காக ஏழுமலையான் கோயிலுக்கு வந்த பி.ஆர் நாயுடுவை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர். ஏழுமலையானை வழிபட்ட பின் அவர் தன்னுடைய பதவியை ஏற்றுக் கொண்டார்.

தொடர்ந்து அவருக்கு தேவஸ்தான உயரதிகாரிகள் நினைவு பரிசுகளை வழங்கிய நிலையில்,
வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர்.

Tags :
BR NaiduChairmanTirumala Tirupati Devasthanam
Advertisement
Next Article