Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#PalakkadByelection | சொந்த கட்சி வேட்பாளரையே காங்கிரஸ் விமர்சனம் செய்ததா? - வைரலான வீடியோ உண்மையா?

11:43 AM Nov 14, 2024 IST | Web Editor
Advertisement

This News Fact Checked by  ‘Newsmeter’

Advertisement

பாலக்காடு சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் மாங்கூத்திலுக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான வி.டி. சதீசன் குற்றம்சாட்டியதாக வீடியோ ஒன்று வைரலாக பரவியது. இதுகுறித்த உண்மைத் தன்மையை விரிவாக காணலாம்

பாலக்காடு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் இம்மாதம் 20ம் தேதி நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயாக முன்னணி சார்பில் ராகுல் மாங்கூத்தில் போட்டியிடுகிறார். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு பாலக்காடு சட்டமன்றத் தொகுதியில் கறுப்புப் பணம் தொடர்பான சர்ச்சை ஊடகங்களில் கவனம் பெற்றது.

அரசியல் கட்சிகள் கருப்பு பணத்தை வாக்காளர்களுக்கு விநியோகம் செய்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவரான வி.டி.சதீசன் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் மாங்கூத்திலுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக சமூக வலைதளங்களில் சில நொடிகள் கொண்ட வீடியோ ஒன்று பரவி வைரலானது. இதன் மூலம் சொந்த கட்சியினரையே எதிர்க்கட்சித் தலைவர் விமர்சனம் செய்துள்ளார் என பலர் பதிவிட்டனர். இந்த வீடியோ தொடர்பாக நியூஸ் மீட்டர் உண்மை சரிபார்ப்புக்கு உட்படுத்தியது.

எதிர்க்கட்சித் தலைவரின் வீடியோ - உண்மைச் சரிபார்ப்பு

பாலக்காடு காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் மாங்கூத்தலுக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் ப் பரவும் வீடியோவின் மொத்த கால அளவு 12 வினாடிகள் மட்டுமே இருந்தன. அந்த வீடியோவில் எதிர்க்கட்சித் தலைவர் வீ.டி.சதீசன் ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய ஒரு வாக்கியம் மட்டுமே அந்த காணொலியில் இடம்பெற்றிருந்தது. ஆறு வினாடிகள் மட்டுமே உள்ள இந்த பகுதி இரண்டு முறை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பட்டு , அவற்றும் வேட்பாளர் ராகுல் மாங்கூத்தில் மற்றும் காங்கிரஸ் எம்பி ஷஃபி பரம்பில் ஆகியோரின் படம் எடிட் செய்யப்பட்ட வீடியோ பரப்பப்பட்டுள்ளது.

பரவும் வீடியோவில் செய்தியாளர் சந்திப்பின் பகுதி முழுமையடையாததால், அதன் முழு வடிவத்தைப் பார்க்க நவம்பர் 8, 2024 அன்று காலை 11:30 மணிக்கு 24 செய்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நேரலையை அதன் யூடியூப் பக்கத்தில் கண்டோம். இந்த 3 நிமிட வீடியோவில் எதிர்க்கட்சித் தலைவர் பாலக்காட்டில் கருப்புப் பணம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்துப் பேசியதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் கேள்விகளை எழுப்பினர்.

பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர் அதனைப் பற்றி மீண்டும் விவாதிக்கப்பட வேண்டிய தேவையில்லை எனவும் ராகுல் மாங்கூத்தில் அதற்கு சரியாக பதில் சொல்லியிருக்கிறார். தயவு செய்து ராகுல் மாங்கூத்தின் பதிலை எடுத்துப் பாருங்கள் என வீ.டி.சதீசன் தெரிவித்தார். இதன் மூலம் காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் எந்த விமர்சனங்களையும் முன்வைக்கவில்லை என்பது தெளிவாகிறது. மேலும் சேலக்கரையில் நடைபெற்ற இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் நீண்ட காணொலியின் எதிர்க்கட்சித் தலைவரின் முகநூல் பக்கத்தில் பகிரப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

முடிவு:

பாலக்காடு சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல் மாங்கூத்திலுக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் வி.டி. சதீசன் குற்றம்சாட்டியதாக பரவும் வீடியோ போலியானது என்பது நிரூபணமாகியுள்ளது.

Note : This story was originally published by ‘Newsmeter’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.

Tags :
KeralaPalakad By ElectionPalakkadRahul MankoottathilV D Satheeshan
Advertisement
Next Article