Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மியான்மரை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - 25 பேர் உயிரிழப்பு?

மியான்மரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 25 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
04:56 PM Mar 28, 2025 IST | Web Editor
மியான்மரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 25 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement

மியான்மர் மற்றும் தாய்லாந்தில் இன்று (மார்ச் 28) அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மியான்மரின் மாண்டலே அருகே முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவாகியிருந்தது. சிறிது நேரத்தில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அண்டை நாடுகளான வியட்நாம், மலேசியா, வங்காளதேசம் மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களிலும் இதன் தாக்கம் உணரப்பட்டது.

Advertisement

நிலநடுக்கம் காரணமாக, மியான்மர் மற்றும் தாய்லாந்தின் பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் மிகப்பெரிய கட்டிடம் சரிந்து விழுந்தது. புதிதாக கட்டப்பட்டுக்கொண்டிருந்த அந்த கட்டிடம் இடிந்து விழுந்ததால், இடிபாடுகளில் ஏராளமான ஊழியர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில், மியான்மரின் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 25 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தாய்லாந்தில் 4 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இடிபாடுகளுக்கும் சிக்கி பலர் மாயமாகியுள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. நிலநடுக்கத்தில் கட்டிடங்கள் இடிந்து விழுவது தொடர்பாக காட்சிகள் இணையத்தில் வெளியாகி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tags :
earthquakeMyanmarMyanmar Earthquakenews7 tamilNews7 Tamil Updatesthailand
Advertisement
Next Article