Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் | கட்டடங்கள் குலுங்கிய அதிர்ச்சி காட்சிகள்!

03:03 PM Jan 01, 2024 IST | Web Editor
Advertisement

நிலநடுக்கத்தால் அடுக்குமாடி கட்டடங்கள் குலுங்கிய வீடியோ காட்சிகளை சமூகவலைதளத்தில் அப்பகுதி மக்கள் பகிர்ந்துள்ளனர். 

Advertisement

ஜப்பான் நாட்டின் மேற்கு கடலோரப் பகுதியில் இந்திய நேரப்படி பிற்பகல் 12.40 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 7.6 என பதிவாகியுள்ளது.

ஹோன்ஷூ அருகே 13 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இஷிகாவா, நிகாடா,  டோயாமா மற்றும் யமகட்டா பகுதிகளுக்கு அந்நாட்டு அரசு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.  தொடர்ந்து கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு விரைவாக செல்லுமாறு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது.

தேசிய அளவிலான மீட்பு படையினர் மற்றும் காவலர்கள், இராணுவத்தினர் போர்க்கால அடிப்படையில் களமிறக்கப்பட்டு, மக்களை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனிடையே,  ஜப்பானின் மேற்கு பகுதியில் உள்ள நகரங்களில் கடல் அலை லேசான உயர்வுடன் பொங்கி வந்துள்ளது.  அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் கூடுதல் அலைகளை உயரமாக ஏற்படுத்தி, சுனாமியாக மாறலாம் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் அடுக்குமாடி கட்டடங்கள் தரைமட்டமாகும் வீடியோ காட்சிகளை சமூகவலைதளத்தில் அப்பகுதி மக்கள் பகிர்ந்துள்ளனர். வீடியோ காட்சிகளை பார்க்கும் போது உயிர் சேதமும், பொருட் சேதமும் அதிக அளவு ஏற்படும் என தெரிகிறது.

 

 

 

 

 

Advertisement
Next Article