Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 55ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை!...

07:27 AM Jan 03, 2024 IST | Web Editor
Advertisement

ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஜப்பானின் மேற்குப் பகுதியில் திங்கள் கிழமை பகல் 12 மணிக்கு மேல் ரிக்டர் அளவில் 3.5 முதல் 7.6 வரை அடுத்தடுத்து 10-க்கும் அதிக முறைஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - இந்திய தூதரகத்தின் உதவி எண் அறிவிப்பு! நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சத்துடன் வீட்டைவிட்டு வெளியேறினார். ஜப்பான் தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நகரங்களில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இதுவரை 55 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஷிகாவா மற்றும் நிகாட்டா ஆகிய மாகாணங்களை மையமாக கொண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் வீடுகள் உள்ளிட்ட ஏராளமான கட்டடங்கள் இடித்து விழுந்தன. இந்நிலையில், பலி எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.
Advertisement
Next Article