Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு!

08:56 AM Apr 18, 2024 IST | Web Editor
Advertisement

ஜப்பானில் நேற்று இரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டர் அளிவில் 6.4 ஆக பதிவானது.  

Advertisement

ஜப்பான் நாட்டின் மியசாகி மாகாணத்தில் கடந்த 8 ஆம் தேதி காலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.  தென்சீன கடலில் ஒசுமி தீபகற்பத்தில் 40 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் மியசாகி மாகாணத்தின் ஒருசில பகுதிகளில் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன.  இந்த நிலநடுக்கம் தொடர்பாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், ஜப்பானின் மேற்கு மாகாணமான உவாஜிமா என்ற பகுதியில் நேற்று (ஏப்.17) இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டர் அளவில் 6.4 அளவிற்கு பதிவானது.  இந்த நிலநடுக்கம் அங்குள்ள ஷிகாகு, கியாஷூ ஆகிய இரு தீவுகளில் 25 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.  இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை என்று ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது.  இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு விவரங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

Tags :
earthquakeJapan
Advertisement
Next Article