இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை.!
இந்தோனேஷியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவின் வடக்கு சுமத்திரா தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.9ஆக பதிவாகியுள்ளது. இதனால் இந்தோனேஷியா மட்டுமல்லாது அதனை ஒட்டிய கடற்கரை பிராந்தியங்களுக்கு நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு சுமத்திரா தீவுகளில் இன்று காலை சரியாக 10.49 மணியளவில் இந்த நிலநடுக்க ஏற்பட்டது. சுமாத்திரா தீவுகளை ஒட்டிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள போதிலும் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு எவ்வித எச்சரிக்கையும் இதுவரை விடுக்கப்படவில்லை.
நேற்று இரவு மியான்மர் நாட்டில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள மணிப்பூர் மாநிலத்தின் உக்ருல் பகுதியில் இருந்து சுமார் 208 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் இரவு 10.01 மணி அளவில் ஏற்பட்டுள்ளது. இதனை நில அதிர்வுக்கான தேசிய மையம் உறுதி செய்துள்ளது.