Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவு!

பிலிப்பைன்சில் 7.4 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
08:38 AM Oct 10, 2025 IST | Web Editor
பிலிப்பைன்சில் 7.4 என்ற ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
Advertisement

பிலிப்பைன்ஸ் நாட்டின் மின்டானோவ் நகரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 7.4 என்ற ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. மிண்டனோ தீவின் மெனே நகர் அருகே கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 62 கிமீ (38.53 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். தொடர்ந்து கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் உயரமான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Tags :
earthquakePhilippinesPhilippinesearthquakeRichter scaletsunami
Advertisement
Next Article