வடமேற்கு சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 7 பேர் காயம்!
சீனாவின் வடமேற்கில் உள்ள கான்சு மாகாணத்தில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. கான்சு மாகாணத்தில் உள்ள லாங்ஸி மாவட்டத்தில் இன்று அதிகாலை 5.49 மணியளவில் 10 கி.மீட்டர் ஆழத்தில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவாகி உள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் போது கட்டிட மேற்கூரை ஓடுகள் இடிந்து விழுந்துள்ளது. இதில் 7 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் நிலநடுக்கத்தால் எட்டு வீடுகள் இடிந்து விழுந்ததாகவும், 100- க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நிலநடுக்கத்தால் அண்டை மாவட்டங்களான சாங்சியான், வெயுவான், லிண்டாவோ, டிங்ஸி, வுசான், தியான்சுயி ஆகிய பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டது. மொத்தம் 43 முறை அதிர்வுகள் பதிவாகியுள்ளதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.