Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வங்காளதேசத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவு!

வங்காளதேச தலைநகர் டாக்கா அருகே ரிக்டர் அளவில் 5.7 நிலநடுக்கம் ஏற்பட்டது.
12:48 PM Nov 21, 2025 IST | Web Editor
வங்காளதேச தலைநகர் டாக்கா அருகே ரிக்டர் அளவில் 5.7 நிலநடுக்கம் ஏற்பட்டது.
Advertisement

வங்காளதேச தலைநகர் டாக்கா அருகே இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகியுள்ளது. நர்சிங்டி பகுதியில் இருந்து தெற்கு-தென்மேற்கில் 13 கிலோமீட்டர் தூரத்தில் இன்று காலை 10.08 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது புவியின் மேற்பரப்பில் இருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது.

Advertisement

இதற்கு முன் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் இந்த நிலநடுக்கம் காரணமாக இந்தியாவின் கொல்கத்தா மற்றும் வடகிழக்குப் பகுதிகளின் பல இடங்களில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கொல்கத்தா மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் வலுவான நில அதிர்வுகள் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனால் மக்கள் பலரும் வீடுகள் மற்றும் அலுவலகங்களை விட்டு வேகமாக வெளியே வந்துள்ளனர். இதேபோல் கவுகாத்தி, அகர்தலா, ஷில்லாங் உள்ளிட்ட இடங்களிலும் லேசான நில அதிர்வு பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக இந்தியாவில் இதுவரை யாருக்கும் எந்தவித காயங்களும், பாதிப்பும் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
BangladeshBangladeshearthquakePowerful earthquakeRichter scale
Advertisement
Next Article