தெய்வீகத்தின் மத்தியில் வறுமை... 22 லட்சம் விளக்குகளின் ஒளியில் ஜொலித்த அயோத்தியின் மறுபக்கம்.. அகிலேஷ் யாதவ் பதிவு!
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தி நகரில் 22.23 லட்சம் விளக்குகள் தீபோற்சவ நிகழ்வின் மறுபக்கமாக அம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கடந்த 2017 முதல் அயோத்தி நகரில் தீபோற்சவ விழா விமரிசையாக கொண்டப்பட்டு வருகிறது. 2017-ல் 51 ஆயிரம் விளக்குகளுடன் இந்த முயற்சி தொடங்கப்பட்டது. 2019-ல் 4.10 லட்சம், 2020-ல் 6 லட்சம், 2021-ல் 9 லட்சம் என இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2022-ம் ஆண்டில் 17 லட்சத்திற்கும் அதிகமான தீபங்கள் ஒளிவீசி கின்னஸ் சாதனை படைத்தன.
இந்நிலையில் தீபாவளியின் மறுபக்கத்தை உத்திரபிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், சமாஜவாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,
“தெய்வீகத்தின் மத்தியில் வறுமை... வறுமை ஒருவரை விளக்குகளில் இருந்து எண்ணெய் எடுத்துச் செல்ல கட்டாயப்படுத்தினால், கொண்டாட்டத்தின் வெளிச்சம் மங்கலாகிறது. காடு மட்டுமின்றி ஒவ்வொரு ஏழையின் வீடும் ஒளிர்வடைய, இது போன்ற ஒரு திருவிழா வர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.