Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் கலந்தாய்வு ஒத்திவைப்பு!

12:20 PM Jul 06, 2024 IST | Web Editor
Advertisement

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் கலந்தாய்வு குறித்த விவரங்கள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கலந்தாய்வு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்தியா முழுவதும் நடப்பு கல்வியாண்டிற்கான மருத்துவர் நுழைவு தேர்வான நீட் தேர்வு நடைபெற்றது.  அந்த வகையில் நீட் தேர்வுக்கான முடிவுகள் வெளியானது.  இதனையடுத்து வெளியான நீட் தேர்வு முடிவில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது தெரியவந்தது.  இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து குரல் எழுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுவரை நடைபெறாத வகையில் 67 பேர் 720க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பிடித்தது சர்ச்சையைக் கிளப்பியது.  இதையடுத்து, தேர்வெழுதிய லட்சக்கணக்கானோரில் 1563 பேருக்கு மட்டும் தேசிய தேர்வு முகமை கருணை மதிப்பெண்களை அளித்ததாகக் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

என்சிஇஆா்டி பாடப் புத்தகங்களில் மேற்கொள்ளப்பட்ட சில  மாற்றங்களாலும்,  சில தோ்வு மையங்களில் மாணவர்கள் நேரத்தை இழந்ததாலும் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன என்று என்டிஏ விளக்கம் அளித்தது.  உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு கருணை மதிப்பெண்களை ரத்து செய்வதாக அறிவித்தது.

இந்நிலையில்,  நாடு முழுவதும்  கருணை மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்ட தோ்வா்களுக்கு ஜூன் 23ம் தேதி மறுதோ்வு நடத்தப்பட்டு,  அதன் முடிவுகள் வெளியிடப்பட்டது.  இதனையடுத்து, இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் கலந்தாய்வு குறித்த விவரங்கள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கலந்தாய்வு, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.  நீட் தொடர்பான முக்கிய வழக்கு வருகிற ஜூலை 8ம் தேதி உச்சநீதிமன்றத்தை விசாரணைக்கு வர உள்ளதால் கலந்தாய்வு குறித்து அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Tags :
Medical Entrance ExaminationNEETNeet CounsellingNEET UG2024
Advertisement
Next Article