Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

LCU-வில் புதிதாக இணைந்த பிரபல மலையாள நடிகர் - அறிமுக வீடியோவுடன் வெளியான பென்ஸ் பட அப்டேட்!

LCU-வில் புதிதாக இணைந்துள்ள பிரபல மலையாள நடிகரின் அறிமுக வீடியோவை பென்ஸ் படக்குழு வெளியிட்டுள்ளது.
08:11 PM Jun 04, 2025 IST | Web Editor
LCU-வில் புதிதாக இணைந்துள்ள பிரபல மலையாள நடிகரின் அறிமுக வீடியோவை பென்ஸ் படக்குழு வெளியிட்டுள்ளது.
Advertisement

தமிழ் சினிமாவில் சினிமாட்டிக் யுனிவர்ஸை அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இதையடுத்து அவரின் படங்களுக்கு லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ்(LCU) என்று ரசிகர்கள் பெயரிட்டனர். லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸில் முதலில் உருவான திரைப்படம் கார்த்தியின் கைதி. இதையடுத்து கமல்ஹாசனின் விக்ரம் படம் யுனிவர்ஸில் சேர்க்கப்பட்டது. இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பையும், அடுத்து வரவுள்ள LCU படம் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்தது.

Advertisement

தொடர்ந்து அந்த லிஸ்டில் விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் இணைந்தது. அதன் பின்பு தயாரிப்பாளராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தனது யுனிவர்ஸில் பென்ஸ் படத்தை தயாரிப்பதாக அறிவித்தார். பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இப்படத்தில் ராகவா லாரன்ஸ் முதன்மை கதாபாத்திரமாக நடிக்கிறார். சாய் அபயங்கர் இப்படத்திற்கு  இசையமைக்கிறார்.  இப்படத்தின் அறிவிப்பு கடந்தாண்டு வெளியானது. அதன் பின்னர், நீண்ட நாளாக இந்த படத்தின் அப்டேட் வெளியாகாமல் இருந்தது நிலையில்,  கடந்த மாதம்   படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியதாக அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில் பென்ஸ்  படத்தின் புதிய கதாப்பாத்திர அறிமுக வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் வால்டர் என்ற கதாப்பாத்திரத்தில்  ‘SAY MY NAME’  என்ற  டயலாக்குடன் தன்னை தானே மலையாள நடிகர் நிவின் பாலி அறிமுகப்படுத்துவதுபோல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு முன்பு லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸில் பிரபல மலையாள நடிகர் பகத் ஃபாசில் நடித்திருந்ததையடுத்து, தற்போது நிவின் பாலி இணைந்துள்ளார்.

Tags :
Bakkiyaraj KannanBenzLokesh Kanagarajraghava lawrence
Advertisement
Next Article