கத்தோலிக்க திருச்சபையின் 267வது தலைவராக போப் 14ம் லியோ பதவியேற்பு!
கத்தோலிக்க கிறிஸ்தவ தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் (வயது. 88) மறைவுக்கு பிறகு, புதிய போப்பை தேர்வு செய்யும் ரகசிய கான்க்ளேவ் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளில் இருந்து வந்த 133 கார்டினல்கள் அமெரிக்காவைச் சேர்ந்த ராபர்ட் பிரிவோஸ்ட்டை புதிய போப்பாக தேர்ந்தெடுத்தனர்.
267வது போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், ரகசிய கான்க்ளேவ் மாநாட்டுக்கு பிறகு சிஸ்டைன் தேவாலயம் முன்பு கூடியிருந்த ஏராளமான கத்தோலிக்க திருச்சபையார் முன்பு தோன்றினார். இதையடுத்து புதிய போப்பாக தேர்தெடுக்கப்பட்டவர்கள் பெயர் மாற்றம் செய்துகொள்ளும் நடைமுறை இருப்பதால், அவருக்கு 14ஆம் லியோ என பெயர் சூட்டப்பட்டது.
இந்த நிலையில் வாடிகனின் போப் 14ஆம் லியோவின் பதவியேற்பதற்கான திருச்சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 14ஆம் லியோ என்று அச்சிடப்பட்ட முத்திரை மோதிரத்தை அணிந்து கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக ராபர்ட் பிரிவோஸ்ட் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிகழ்வில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், உக்ரைன் பிரதமர் ஜெலன்ஸ்கி உள்ளிட்ட உலக தலைவர்கள் பங்கேற்றனர்.