#Tirupati | அன்னதான பிரசாதத்தில் பூரான்? - #TTD மறுப்பு!
திருப்பதி கோயில் அன்னதானத்தில் பூரான் கிடந்தது தொடர்பாக தேவஸ்தானம் விளக்கமளித்துள்ளது.
திருப்பதி மலையில் உள்ள மாதவம் நிலையம் வளாகத்திலும் பக்தர்களுக்கு இலவச உணவு
வழங்கப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை தனக்கு வழங்கப்பட்ட இலவச உணவில், பூரான் ஒன்று இறந்துபோய் கிடந்ததாக, பக்தர் ஒருவர் சுட்டிக்காட்டி தன்னுடைய இலையில் இறந்து கிடந்த பூரானை வீடியோ பதிவு செய்து வெளியிட்டிருந்தார்.
ஏற்கனவே திருப்பதி லட்டு சர்ச்சை தொடரும் நிலையில், இந்த செய்தி வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து திருப்பதி தேவஸ்தானம் செய்திக்குறிப்பை ஒன்று வெளியிட்டது. அதில்,
லட்சக்கணக்கான பக்தர்களுக்கு தினமும் இலவச உணவு வழங்கப்படுகிறது. இதுபோன்ற குற்றச்சாட்டு ஒரு நாள் கூட ஏற்பட்டது இல்லை. முழுவதுமாக வேக வைக்கப்பட்ட உணவில், உடல் பாகங்கள் சேதம் அடையாமல் முழு பூரான் இருப்பதற்கு வாய்ப்பே கிடையாது. எனவே இது இட்டுக்கட்டப்பட்ட பொய். எனவே பக்தர்கள் இந்த பொய்செய்தியை நம்பவேண்டாம் என தேவஸ்தானம் அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.