மருத்துவச் சேர்க்கையின் போதும் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் முறைகேட்டில் ஈடுபட்டாரா? வெளியான புதிய தகவல்!
பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர் ஐஏஎஸ் பதவியை பெறுவதற்காக சிவில் சர்வீஸ் தேர்வு முகமையில் போலி சான்றிதழ் பயன்படுத்தியதாக கூறப்பட்ட நிலையில், தற்போது மருத்துவ சேர்க்கையின் போதும் கிரீமி லேயர் அல்லாத பிரிவைப் பயன்படுத்தியாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
புனே கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றிய பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியான பூஜா கேத்கர், தனி அறை மற்றும் கேபின் கேட்டதுடன் தனது காரில் சட்டத்துக்கு புறம்பாக சிவப்பு சுழல் விளக்கை பொருத்தி சர்ச்சையில் சிக்கினார். அதுமட்டுமின்றி ஐஏஎஸ் பதவியை பெறுவதற்காக சிவில் சர்வீஸ் தேர்வு முகமையில் போலி சான்றிதழ் சமர்ப்பித்து ஊனமுற்றோர் மற்றும் ஓபிசி ஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்திக் கொண்டதாக புகார் எழுந்தது.
இவர் குறித்து பல குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் இதுகுறித்து விசாரிக்க அரசு தனிநபர் விசாரணை ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது. மேலும் பூஜா கேத்கர் தனது பயிற்சி முடிவதற்குள், புனேவில் இருந்து வாஷிம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் மருத்துவ சேர்க்கையும் கிரீமி லேயர் அல்லாத பிரிவைப் 8 லட்சத்துக்கும் குறைவான வருமான உடையவர் என்கிற பிரிவை பயன்படுத்தி பெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் கல்லூரியின் நுழைவுத் தேர்வின் மூலமே சேர்க்கை பெற்றதாகவும், பொது நுழைவுத் தேர்வான CET-ன் மதிப்பெண் பரிசீலிக்கப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
கேத்கர் க்ரீமி லேயர் அல்லாத சான்றிதழையே எங்களிடம் சமர்பித்திருந்தார். மேலும் ஊனம் எதுவும் குறிப்பிடாத மருத்துவ சான்றிதழையும் சமர்பித்திருந்தார்” என தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் தகுதியுள்ள மாணவர்களுக்கும், மத்திய அரசு பணியில் சேர்வோருக்கும் 27% ஓபிசி இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஆனாலும், மத்திய அரசின் பணிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் பணி புரியும் ஓபிசி பிரிவை சேர்ந்த அனைவருக்கும் இந்த இட ஒதுக்கீடு கிடைக்காது. பூஜா கேத்கர் தந்தை அரசு அதிகாரியாக இருந்ததோடு அவர் கிரிமிலேயர் பிரிவிலேயே வருவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் பூஜா கேத்கர் கிரிமிலேயர் அல்லாத சான்று கொடுத்து மருத்துவம் படித்தது தற்போது அம்பலமாகியுள்ளது.
கிரீமி லேயர் அல்லாதவர்களுக்கே கல்வி நிறுவனங்களிலும், மத்திய அரசு வேலைகளிலும், பொது துறை நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு வழங்கப்படும். ஓபிசி பிரிவுகளில், குறிப்பிட்ட வருமான வரம்பிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு மட்டும் இட ஒதுக்கீட்டு பலன்களை வழங்குவதுதான் கிரீமி லேயர் அல்லாத சான்று. ரூ. 8 லட்சத்திற்கும் கீழ் ஆண்டு வருமானம் கொண்டவர்களே கிரீமி லேயர் அல்லாதவர்களாக கருதப்படுவர்.