பூஜா ஹெக்டேவின் பிறந்தநாள் : கதாபாத்திர அறிமுக போஸ்டரை வெளியிட்ட ஜனநாயகன் படக்குழு..!
நடிகை பூஜா ஹெக்டேவின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரின் கதாப்பாத்திர அறிமுக போஸ்டரை ’ஜன நாயகன்’ படக்குழு வெளியிட்டுள்ளது.
07:09 PM Oct 13, 2025 IST
|
Web Editor
Advertisement
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் 'ஜன நாயகன்'. இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ, பிரியாமணி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
Advertisement
இப்படம் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாக உள்ளது. மேலும் நடிகர் விஜய் நடிக்கும் கடைசி திரைப்படம் என்பதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த நிலையில் படத்தின் கதாநாயகியான் பூஜா ஹெக்டே இன்று தனது 35 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனைத் தொடர்ந்து "ஜன நாயகன்" படக்குழு நடிகை பூஜா ஹெக்டேக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து அவரின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பூஜா ஹெக்டே "கயல்" என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Article